கமல்ஹாசன், கவுதமி நடித்த ‘பாபநாசம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள சூரியம் எப்.எம் வானொலி நிலையத்தில் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த விழாவில் கமல்ஹாசன், கவுதமி உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டுமே இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையமைத்த இரண்டு பாடல்களும் தொடர்ந்து அந்த வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இரண்டு பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். ஒரு பாடலை ஹரிஹரனும், இன்னொரு பாடலை சுந்தர் நாராயண ராவ் மற்றும் மாளவிகாவும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் – கவுதமி தம்பதிகளின் மகள்களாக நடித்த நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் ஆகிய இருவரும் கமல்ஹாசனிடம் தந்தையர் தின ஆசியை நேற்று வாங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கமல்ஹாசனின் ரியல் மகள்களாக ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் நேற்று காலையிலேயே தந்தையர் தின ஆசிகளை வாங்கியதை அடுத்து ரீல் மகள்களும் ஆசி வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Kamal “Paapanasam” music launched today through Suriyan FM radio station.