சென்னையில் தயார் நிலையில் உள்ள மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும் தொடக்கி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் வெங்கையா நாயுடு, “தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணி முடிவடைந்து விட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், சென்னையில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. எனவே, இடைத்தேர்தல் முடிந்ததும், மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும். விரைவில் மெட்ரோ ரயில் சென்னையில் ஒரு பகுதியில் ஓடத் தொடங்கும்” என்று கூறினார்.

சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை பணிகள் முழுவதும் முடிவடைந்து சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிவடைந்தது. வரும் 27ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்தவுடன் மெட்ரோ ரயில் ஆரம்பிக்கவுள்ள தேதி இறுதி செய்யப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary : Venkaiah Naidu reports that Chennai Metro Rail will start after R.K.Nagar by-election.