கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ ஆக்சன் படத்தில் அவருடைய மனைவியாக நடித்த கமாலினி முகர்ஜியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. காலத்தால் அழியாத மெலடி பாடலான ‘பார்த்த முதல் நாளே’ என்ற பாடலில் மிக அற்புதமாக நடித்த கமாலினி முகர்ஜி, தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ‘இறவி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி, பாபிசிம்ஹா, கருணாகரன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வரும் நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க கமாலினி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

English Summary : Kamal Pair in “Vetaiyadu Vilayadu” film Kamalinee Mukherjee is now to pair with SJ.Surya next film.