கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களிலிருந்து தமிழக சந்தைகளுக்கு லாரிகள் மூலம் தக்காளி விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், தற்போது விளைச்சல் குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளி விலை உயா்ந்துள்ளது.

தமிழகத்திலும் தக்காளி விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் திங்கள்கிழமை முதல் மீண்டும் படிப்படியாக விலை அதிகரித்ததுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று கிலோ தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ தக்காளி முதல் ரகம் ரூ.150, இரண்டாம் ரகம் ரூ.140, மூன்றாம் ரகம் ரூ.130க்கு விற்பனையாகிறது.

சென்னை மற்றும் புறநகரில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் தரத்துக்கு ஏற்ப ரூ.160 முதல் ரூ.180 வரை விற்கபடுகிறது. பண்ணை பசுமை கடைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் வழக்கம் போல கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *