வைட்டமின் டியினை வைட்டமின் என்பதனை விட ஹார்மோன் என்றே சொல்ல வேண்டும். மிகவும் முக்கியமான சத்து கொண்டது. ஆயினும் இதன் குறைபாடு அநேகரிடம் காணப்படுவதன் காரணமாகவே இதன் முக்கியத்துவத்தினைப் பற்றி எழுத வேண்டி உள்ளது. இன்றைய ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாடு 200 வகையான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றன.

* வைட்டமின் டி குறைபாடால் அடிக்கடி ஏற்படும் குறைபாடுகளான சளி, ஃப்ளூ போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* இதன் குறைபாடு நோய் எதிர்ப்பு சக்தியினைக் குறைக்கின்றது.

* வைட்டமின் டி உடலில் கால்ஷியம் உறிஞ்சப்படுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. இதுவே எலும்பு முறிவுகளைத் தவிர்க்க பெரிதும் உதவுகின்றது. எலும்புகள் உறுதியாய் இருக்கவும், சமச்சீரான உடல் அசைவுக்கும் வைட்டமின் டி பெரிதும் அவசியமாகின்றது. இதன் குறைபாடு எளிதில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தி விடும்.

* நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதற்கும் டி வைட்டமின் உதவுகின்றது.

* குறைந்த வைட்டமின் டி என்பது அதிக உயர் ரத்த அழுத்தம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆக வைட்டமின் டி ரத்த அழுத்தம் சீராய் இயங்கவும். இருதய பாதுகாப்பிற்கும் அவசியம் ஆகின்றது.

* சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகின்றது.

* போதுமான அளவு வைட்டமின் டி உடலில் இல்லை என்றால் எவ்வளவு சாப்பிட்டாலும் பசி இருந்து கொண்டே இருக்கும். ஓயாத பசி இருந்தால் வைட்டமின் டி அளவினையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

* கூர்ந்து கவனித்து செயல்படுவது குறிப்பாக வயது கூடும் பொழுது ஏற்படும். வைட்டமின் டி குறைபாடு இத்தகு பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவர் இப்பரிசோதனை செய்து வைட்டமின் டி தேவைகளுக்கான மாத்திரைகள் அளிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *