அஞ்சான் படத்தை அடுத்து சூர்யா தற்போது நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

முதன்முதலாக மாஸ் படத்தின் கேரள மாநில உரிமையை அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா விற்பனை செய்துள்ளார். இந்த உரிமையை கேரளாவின் முன்னணி திரைப்பட நிறுவனமான சொப்னம் பிலிம்ஸ் பெரும்தொகை கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மாஸ் படத்திற்காக கேரளாவில் உள்ள அதிக தியேட்டர்களை புக் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

வரும் மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘மாஸ்’ திரைப்படத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், சமுத்திரக்கனி, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் பார்த்திபன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.