தொலைதூரக் கல்வி திட்டத்தில் பொறியியல் உள்பட மற்ற தொழில்நுட்ப பாடதிட்டத்திற்கு யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது.

தொலைதூரக் கல்வி கவுன்சில் (Distance Education Council) அமைப்பு, தற்போது யுஜிசியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் தொலைதூர கல்வித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள படிப்புகளை ஒழுங்குபடுத்த யுஜிசி முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி அனைத்து பல்கலைக்கழகங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், பொறியியல், தொழில்நுட்ப பாடங்கள் தொடர்பான பட்டப் படிப்பையோ, பட்டயப் படிப்பையோ தொலை தூரக்கல்வி திட்டத்தில் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி மேற்கண்ட பாடங்களை நடத்தும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மீது யுஜிசி கடும் நடவடிக்கை எடுக்கும் என இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளது.

ஆனால் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளை தொலைத்தூர கல்வி திட்டத்தில் தொடர்ந்து அனுமதிக்க யுஜிசி ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.