அந்த காலத்தில் மேலை நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருகை தந்த வியாபாரிகள்., நமது நாட்டில் இருந்த பல பொருட்களை அங்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து கொண்டு வந்த பல விளை பொருட்களை அறிமுகப்படுத்தி விளைபொருளாக்கினர். அந்த வகையில்., கிடைத்ததே பப்பாளி பழம். இந்த பப்பாளி பழத்தின் நன்மைகள் பலருக்கு தெரிந்தும்., தெரியாமலும் இருக்கிறது. அதனை பற்றி காண்போம்.

முகத்தோல் சுருக்கம்: இளம் வயதில் இருக்கும் சிலருக்கு அவர்களின் முகத்தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக வயோதிகர் போன்ற தோற்றம் உள்ளதாக எண்ணி வருத்தத்தில் இருக்கின்றனர். இவர்களின் வருத்தத்தை போக்குவதற்கு., நன்கு பழுத்த பப்பாளி பழத்தை கூழாக பிசைந்து., தேன் கலந்து முகத்தில் பூசி உலரவிட்டு வேண்டும். பின்னர் முகத்தை கழுவினால்., முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி., பொலிவு பெரும்.

நரம்புத்தளர்ச்சி: மனதளவில் அதிகளவு பதற்றம் அடைபவர்கள் மற்றும் நரம்பியல் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு நரம்பு தளர்ச்சியானது ஏற்படுகிறது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு தினமும் காலையில் பப்பாளி பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியானது விரைவில் குணமடையும்.

நோய் எதிர்ப்பு சக்தி: இரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையானது இயற்கையாகவே பப்பாளி பழத்திற்கு உண்டு. சுற்றுப்புற சூழ்நிலையால் உருவாகும் நோய்களை எளிதில் குணப்படுத்தும் அல்லது கிருமிகளை அழிக்கும் சக்தி உண்டு. வாரத்திற்கு இரண்டு முறை பப்பாளியை உண்டு வர நோய் தொற்றானது ஏற்படாமல் உடல் நலமானது பாதுகாக்கப்படும்.

வயிற்று பிரச்சனைகள்: எந்த ஒரு மனிதனுக்கும் வயிறானது எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் செயல்பட்டு வந்தால் பல விதமான நோய்களில் இருந்து தப்பிக்க இயலும். காலையில் எழுந்தவுடன் தினமும் பப்பாளி பழத்தை உண்டு வந்தால் அஜீரண கோளாறு என்றும் ஏற்படாது. மலச்சிக்கல் மற்றும் மூல நோய் குறைபாடு இருக்கும் நபர்கள் பப்பாளி பழம் சாப்பிட்டு வர நன்மையடையலாம்.

இதயம்: பப்பாளியில் பொட்டாசியம் சத்தானது அதிகளவில் உள்ளது. இதன் மூலமாக நரம்புகளின் இறுக்கும் தன்மை ஏற்படும் பிரச்சனைகள் இருந்து தடுக்கப்பட்டு., இதயத்திற்கும் தேவையான பொட்டாசியத்தை வழங்குகிறது. இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் நிலைநிறுத்துவதன் மூலம் உடல் நலமானது பாதுகாக்கப்டுகிறது.

கல்லீரல்: நமது உடலில் இருக்கும் கல்லீரல் அதிகளவு நச்சுக்கள் தங்குவதாலும்., அதீத சுழற்சி முறையின் காரணமாக கல்லீரலில் வீக்கமானது ஏற்படுகிறது. இதனை தீர்ப்பதற்கு பப்பாளி பழமானது அதிகளவில் உபயோகப்படுகிறது. காலை மற்றும் மதிய நேரத்தில்., பப்பாளி பழத்தை சாப்பிட்டு வரவே., கல்லீரல் இருக்கும் கிருமிகளானது நீங்கி கல்லீரல் குணமாகி நமது உடல் நலமும் பாதுகாக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *