+2examகடந்த வாரம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரிகளுக்கு விறுவிறுப்பாக விண்ணப்பித்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜூன்/ஜூலை 2016ல் நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

நடைபெற்று முடிந்த மார்ச்/ஏப்ரல் 2016 தேர்வில் தோல்வியுற்றவர்கள்/வருகைப்புரியாதவர்களுக்காக வருகிற 22.06.2016 அன்று தொடங்கி 04.07.2016 வரை நடைபெறவிருக்கும் ஜூன்/ஜூலை 2016, மேல்நிலை சிறப்புத் துணை தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும்.

விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று 24.05.2016 (செவ்வாய்கிழமை) முதல் 27.05.201 (வெள்ளிக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் Browsing centre-கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.

‘எச்’ வகை தனித்தேர்வர்கள் (H) ஒரு பாடத்திற்கு ரூ.50 + (இதர கட்டணம் ரூ.35/-) மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50/- ஐ சேர்த்து பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்துக்கொள்ளலாம்.

தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary : Plus 2 for students who failed tunaittervu Date Announced