சென்னையில் நாளை (21.09.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
கிண்டி:
ஆலந்தூர் – பாலகிருஷ்ணாபுரம் 1 முதல் 3-வது தெரு வரை, ஆபீசர்ஸ் காலனி, கக்கன் நகர் முழுவதும், அம்பேத்கர் நகர், சாஸ்திரி நகர், நங்கநல்லூர் – பிவி நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், கே.கே. நகர், டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.