வட சென்னையில் உள்ள அனல் மின் நிலயத்தின் முதல் யூனிட்டில் உள்ள கொதிககலன் பழுது அடைந்துள்ளது. அதனால் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. முதல் யூனிட்டில் நிலக்கரி எடுத்து செல்லும் கொதிககலன் பழுதடைந்துள்ளது. இத்தனை சரி செய்யும் பணியை ஊழியர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர். ஏற்கனவே சென்ற ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி 2ஆவது யூனிட்டில் உள்ள முதல் அலகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுமார் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள பழுததையும் சேர்த்து 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.