தற்போது கோலிவுட்டில் தயாராகும் பிரபலங்களின் படங்களின் சாட்டிலைட் உரிமைகளை பெறுவதற்காக முன்னணி சாட்டிலைட் தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கமே ஒரு புதிய சாட்டிலைட் சேனல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு திரைப்படவிழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். சாட்டிலைட் சேனல் ஒன்றின் உரிமையை பெறுவதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள 970 உறுப்பினர்களுக்கும் கடிதம் மற்றும் குறுந்தகவல் அனுப்பியுள்ளதாகவும் மார்ச் மாதம் 8ஆம் தேதி நடைபெறவிருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் சாட்டிலைட் சேனல் வாங்குதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் சங்கத்தின் சாட்டிலைட் சேனலில் ஒளிபரப்ப இதுவரை 30 திரைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இனி வருங்காலத்தில் அதிக திரைப்படங்கள் கிடைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

English Summary: Producer Association is going to launch New Satellite Channel.