கணவனால் கைவிடப்பட்டோர், விதவை, ஆதரவற்றோர், மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆண்களின் துணையின்றி பெண்களை குடும்பத் தலைவராகக் கொண்டுள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது: சென்னையில் பெண்களை குடும்பத் தலைவராக கொண்டுள்ள குடும்பங்களின் 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள், அவர்களின் மகள், மகன்களுக்கு அரசு செலவில் தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தையல் பயிற்சி, சில்லறை வணிகம், நோயாளிகள் பராமரிப்பு, அழகுக்கலை, கணினிப் பயிற்சி, மின்பொருள்கள் பழுதுபார்க்கும் பயிற்சி, தோல் பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் 1 மாதம் முதல் 12 மாதங்கள் வரையில் வழங்கப்படும்.

எனவே, பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்டவர்கள் ஆகஸ்ட் 3 முதல் 20 ஆம் தேதி வரையில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம். வரும்போது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை, கல்வித் தகுதிச் சான்றுகளுடன் வரவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திட்ட அலுவலர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலகு, முதல் மாடி, 100, அண்ணா சாலை (ஸ்பிக் கட்டடம் அருகில்), கிண்டி, சென்னை – 32 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். 2235 0636, 9445034102, 9445034104, 9445034105 ஆகிய எண்களிலும் dpiuchn@yahoo.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Apply Professional training for women to manage the family.