இளையதளபதி விஜய்யின் படங்களுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இருப்பதை போல நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் மாபெரும் ஓப்பனிங் இருக்கும் என்பது அனைவரும் தெரிந்ததே. இதற்கு முன்னர் விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா, கத்தி ஆகிய படங்களுக்கு கேரளாவில் மாபெரும் வரவேற்பு இருந்தது என்றும், இந்த படங்கள் கேரளாவில் மிகப்பெரிய வசூலை பெற்றது என்பதையும் அனைவரும் அறிவோம்.

இந்நிலையில் விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாவது போன்று கேரளாவிலும் 225 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஷங்கரின் ‘ஐ’ கேரளாவில் 227 திரையரங்குகளில் வெளியானது. இன்னும் ஒருசில திரையரங்குகளில் ‘புலி’ படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால், ‘ஐ’ சாதனையை ‘புலி’ முறியடித்துவிடும் என்றே கூறப்படுகிறது.

மேலும் ‘புலி’ திரைப்படம் கர்நாடகாவில் 135 திரையரங்குகளிலும், ‘புலி’ படத்தின் இந்தி பதிப்பு வட மாநிலங்களில் அதிகளவிலான திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

English Summary : “Puli” sets record in kerala by 225 opening screens.