வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்காக விண்ணப்பம் செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்காக மூன்று நாள் இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடைபெறவுள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்காக நடத்தப்பட உள்ள இந்த பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த பயிற்சியை யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கம், “எம்பவர்’ சமூக நீதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கி எழுத்தர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சென்னை பெரியார் திடலில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் வங்கி தேர்வாணையத்துக்கு (ஐபிபிஎஸ்) அனுப்பிய விண்ணப்பித்தின் நகலை, “பொதுச் செயலாளர், யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கம், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, எண் 139, பிராட்வே, சென்னை 600108′ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இது குறித்து மேலும் தகவல் பெற 9381007998, 9445174128, 9444993844, 9176075253 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : 3 days free training class for Bank exams conducted in Chennai.