தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலையில் அதே நேரத்தில் தரமான முறையில் பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுக்களை வழங்கி வரும் ஆவின் பால் நிறுவனம் இன்று முதல் 250 மி.லி அளவு கொண்ட பால் பாக்கெட் சென்னை மாநகர் முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும் என ஆவின் நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.

சந்தையில் தற்போது ஆவின் பால் 500, 1,000 மி.லி. கொள்ளளவு கொண்ட பால் பாக்கெட்டுக்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி முதல் 250 மிலி அளவு கொண்ட பால் பாகெட்டுக்கள் சென்னையின் ஒருசில இடங்களில் பரிசோதனை முறையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கால் லிட்டர் பால் பாக்கெட்டுக்களுக்கு பொதுமக்களிடம் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பை முன்னிட்டு சென்னை மாநகர் முழுவதும் இந்த கால் லிட்டர் பால் பாகெட் விற்பனை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ரூ.11 மதிப்பு விலையில் விற்பனை செய்யப்படும் இந்த கால் லிட்டர் பால் பாக்கெட்டுக்கள் ஆவின் விற்பனையகம், ஆவின் பாலகங்களில் கிடைக்கும் என்றும் இன்னும் ஓரிரு வாரங்களில் சில்லறை விற்பனை கடைகளிலும், முகவர்கள் வாயிலாகவும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

English Summary : Aavin Milk company now launched Quarter liter packet for Rs.11 in Chennai .