சென்னையில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்றான சென்னை ஐகோர்ட்டின் கட்டிடங்களை மத்திய தொல்லியல் துறை இயக்குனர், புராதன கட்டிடங்கள் பராமரிப்புத் துறை இயக்குநர் உள்பட நிபுணர்கள் குழு ஒன்று நேற்று ஆய்வு செய்தனர். 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் புராதனக் கட்டிடங்களை தொடர்ந்து பாதுகாப்பது மற்றும் முறையாக பராமரிப்பது குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஐகோர்ட் நிர்வாகப் பதிவாளர் விஜயன், வழக்குரைஞர் எம்.டி.அருணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுக்குழுவினர், சென்னை ஐகோர்ட் கட்டிடத்தின் தன்மையைக் கண்டறிந்து, அதன் மாண்பு மாறாமல் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பணிகளை எவ்வாறு, எப்போது மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகள் அளிக்க உள்ளதாகவும் கூறினர்.

English Summary : One of the oldest building Chennai High Court was examined by Archeology department yesterday.