‘சைவம்’ படத்தின் ரிலீஸுக்கு பின்னர் நடிகை அமலாபாலை திருமணம் செய்துகொண்ட இயக்குனர் ஏ.எல்.விஜய், திருமணத்திற்கு பின்னர் இயக்கியுள்ள திரைப்படம் ‘இது என்ன மாயம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மே 1ஆம் தேதி சூர்யாவின் மாஸ்’, ஆர்யாவின் புறம்போக்கு ஆகிய படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மே 1ஆம் தேதி ரேஸில் தற்போது விஜய் படமும் இணைந்துள்ளது.

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை அந்தோணி படத்தொகுப்பு செய்துள்ளார்.

ராதிகா சரத்குமார் தனது ‘மேஜிக் பிரேம்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிக விரைவில் நடைபெற உள்ளதாகவும், இசை வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

English Summary: Director Vijay’s film joins in the race with Surya and Arya’s Films.