உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்த ‘நண்பேண்டா’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் உதயநிதி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

உதயநிதி நடிக்கவுள்ள அடுத்த படமான ‘இதயம் முரளி’ என்ற படத்தை அஹ்மத் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜீவா, த்ரிஷா நடித்த ‘என்றென்றும் புன்னகை’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பின்னர் உதயநிதியுடன் ஹன்சிகா மீண்டும் ‘இதயம் முரளி’ படத்தின் மூலம் ஜோடி சேருகிறார். மேலும் இந்த படத்தின் முக்கியமன ஒரு கேரக்டரில் பிரபு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபுவுடன் உதயநிதி நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் நியூயார்க்கில் தொடங்கி அதன் பின்னர் ஒருசில ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற உள்ளது. மேலும் உதயநிதி திருக்குமரன் இயக்கத்தில் கெத்து’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Udhayanidhi Stalin and Prabhu joins for first time.