சென்னை மாநகராட்சியில் 1894 கி.மீ நீளத்துக்கு 7 ஆயிரத்து 351 மழைநீர் வடிகால்கள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாநகராட்சியுடன் இணைக் கப்பட்ட பகுதிகளில் புதிதாக மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வரு கின்றன.
கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, மாநகரப் பகுதியில் மழைநீர் வடிகால்கள் தொடர்பாக முறை யான ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து இணைக்கப்படாத கால்வாய் களை இணைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற் கொண்டது. அதில் விடுபட்ட பகுதியில் மழைநீர் வடிகால்களை இணைக்க ரூ.7 கோடியே 85 லட்சம் செலவில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்காக டெண்டரும் கோரப்பட் டுள்ளது.