சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிRajini-ranjitப் படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் கூறிய கதை ஒன்று ரஜினியை மிகவும் கவர்ந்ததால் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால், இளையதலைமுறை இயக்குனர் படத்தில் நடிக்க ரஜினி முடிவு செய்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக ரஜினி கேட்டு வந்த கதைகளில் ரஞ்சித்தின் கதையை அவர் தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் இந்த படத்தில் நடித்து முடித்துவிட்டு அவர் ‘எந்திரன் 2’ படத்தில் ஷங்கரின் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. ரஜினிகாந்த்- தாணு- ரஞ்சித் இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகையின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.