சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களின் வருகைப்பகுதியின் போர்டிகோ பகுதி வரை வாகனங்கள் செல்வதற்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தாairport+0405லும் வி.ஐ.பிக்கள், வயதானவர்கள், நோயாளிகள், உடல் ஊனமுற்றவர்கல் ஆகியோர்களின் வாகனங்கள் மட்டும் போர்டிகோ பகுதி வரை செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று விமான நிலைய ஆணையக அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய போலீசார், மற்றும் மத்திய தொழிற்படை போலீசார் ஆகியோர்களின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பயணிகளின் வசதியை முன்னிட்டு அனைத்து வாகனங்களையும் போர்டிகோ வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த உத்தரவு சோதனை கால அடிப்படையில் உடனே அமலாகும் என்றும், ஒருவார காலத்திற்கு பின்னர் போர்டிகோவுக்கு வரும் வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டால் அதன்பின்னர் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.