பூஜை, ஆம்பள வெற்றி படங்களை அடுத்து விஷால் தற்போது சுசீந்திரனின் இயக்கத்தில் ‘பாயும் புலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படVishal_0405த்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஷால் தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை கேட்டு ஓகே சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஷாலின் அடுத்த படத்தை இயக்கவுள்ளர் தேசிய விருது பெற்ற பாண்டிராஜ் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் சந்தித்து அடுத்த படம் குறித்து ஆலோசனை செய்ததாகவும், ‘பாயும் புலி’ படப்பிடிப்பு முடிந்ததும் இந்த புதிய படத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை தன்னுடைய ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் மூலம் விஷால் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாண்டிராஜ் ஏற்கனவே சிம்பு-நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார். தற்போது அவர் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். சூர்யா, அமலாபால் கெளரவ வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில் பிந்துமாதவி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.