Education_fairசென்னையில் தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் நடைபெற்ற 2 நாள் சர்வதேச கல்வி கண்காட்சி சிறப்பாக முடிவடைந்தது. இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் எதிர்கால படிப்பு குறித்த பல விஷயங்களை தெரிந்து கொண்டனர்.

வருடந்தோறும் நடைபெற்று வரும் ‘தி இந்து எஜுகேஷன் பிளஸ்’ சார்பில் நடத்தப்படும் சர்வதேச கல்வி கண்காட்சிகள் இவ்வருடமும் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 53 நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பங்கேற்றன. வழக்கமாக, இளநிலை பட்டபடிப்பு படித்துவிட்டு மேல் படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களே அதிகளவில் கண்காட்சியில் பங்கேற்க வருவார்கள். ஆனால் இந்த வருடம் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் இளநிலை படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பி ஏராளமான மாணவர்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தூதர் ஜுடித் லெப்பூஷிட்ஸ் இந்த கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியபோது, ‘‘‘இந்த சர்வதேச கல்விக் கண்காட்சி மூலம் நிறைய மாணவர்களை சந்திக்க முடிகிறது என்றும் அமெரிக்காவில் உள்ள கல்விச் சூழல், படிப்புக்காக விசா பெறுவது போன்ற விவரங்களை இக்கண்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு எடுத்துக்கூறி வருவதாகவும் கல்விக்காகவே ‘எஜுகேஷன் யுஎஸ்ஏ’ என்ற அமைப்பை அமெரிக்க அரசு உருவாக்கியுள்ளதாகவும், அந்த அமைப்பின் பிரதிநிதிகளும் மாணவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.