காக்கி சட்டை படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ரஜினிமுருகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் டிராக் இன்று ரிலீஸாகவுள்ளது. இந்த தகவலை படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

டி.இமானின் இசையில் உருவான ‘என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா’ என்ற தொடங்கும் பாடலை இன்று டி.இமான் வெளியிடுகிறார். இன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் இமான், அந்த நிகழ்ச்சியின் இடையே ரஜினிமுருகன்’ படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை வெளியிட உள்ளார்.

திருப்பதி பிரதர்ஸ் என்.லிங்குசாமி தயாரித்திருக்கும் இந்த படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மற்ற பாடல்கள் மிக விரைவில் சென்னையில் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

English Summary : Sivakarthikeyan’s RajiniMurugan film single track will be released today in Singapore.