இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் டீசர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் ரிலீஸ் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி ரிலீஸாகும் என்றும், படத்தை வரும் செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி தினத்தில் ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

சமீபத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த கட்டுப்பாடுகளின்படி பெரிய பட்ஜெட் படங்கள் ஒருசில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய முடியும் என்ற விதிமுறைக்கு உட்பட்டு செப்டம்பர் 17ஆம் தேதியை தேர்வு செய்ததாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் விஜய்யின் ‘புலி’ படம் ரிலீஸாகும் அதே நாளில் விஷாலின் ‘பாயும் புலி’ படமும் ரிலீஸாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் கத்தி படத்துடன் விஷாலின் பூஜை படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஸ்ருதிஹாசன் ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த படத்திற்கு நட்டி என்ற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

English Summary : Ilayathalapathy VIjay’s next film “Puli” will be released on June 22nd.