தமிழில் தற்போது அஜீத்துடன் ‘தல 56’, விஜய்யுடன் புலி ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன், விரைவில் சிங்கம் 3 படத்திற்காக சூர்யாவுடன் இணையவுள்ளார். இந்நிலையில் மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்த ‘கல்யாண சமையல் சாதம்’ தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தனுஷின் ராஜண்ணா படத்தை தயாரித்த ஆனந்த் எல்.ராய் அவர்கள் பெற்றுள்ளார். இந்த படத்தில் இம்ரான்கான் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே ‘லக்’ என்ற இந்தி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு திருமண வீட்டில் நடைபெறும் சுவாரசியமான சம்பவங்களை வைத்து அமைக்கப்பட்ட இந்த திரைக்கதையில் இந்திக்கு தகுந்தாற்போல் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

English Summary : Imran Khan and Shruthi haasan once again to act again after Luck movie.