அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் தயாராகி வரும் ‘தல 56’ படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா, சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘ரஜினி முருகன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சொந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விரைவில் தொடங்கவுள்ள சிவகார்த்திகேயன் தனது முதல் தயாரிப்பில் அவரே நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் இயக்கவுள்ளார்.

இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கவுள்ள இரண்டாவது படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அஜீத் படத்தை சிறுத்தை சிவா இவ்வருட இறுதிக்குள் முடித்துவிடுவார் என்றும், அதன்பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

English Summary : After Ajith 56 Siruthai Siva plans to direct Sivakarthikeyan for his next film.