பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியாகியது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் இவ்வருடமும் தேர்ச்சி பெற்றனர். மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவ- மாணவிகள் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை செய்துள்ளனர். இரண்டாம் இடத்தை 498 மதிப்பெண்கள் பெற்று 192 பேர்களும் 497 மதிப்பெண்கள் எடுத்து 540 பேர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்து உள்ளனர்.

மேலும் இவ்வருடம் கணக்கு பாடத்தில் 27,134 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களும், அறிவியல் 1,15,853 பேர் 100க்கு 100 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 51,629 பேர்கள் 100 மதிபெண்களூம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் 98.04% தேர்ச்சி மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக 97.98% பெற்று விருதுநகர் மாவட்டமும், மூன்றாவதாக 97.62% பெற்று திருச்சி மாவட்டமும் உள்ளது.

அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவ- மாணவிகள் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாழப்பாடியை சேர்ந்த ஜெயநந்தனா, பட்டுக்கோட்டையை வைஷ்ணவி, பெரம்பலூரை பாரதிராஜா ஆகியோர் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

English Summary : 10th exam results. 41 people got first place with a score of 499.