பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக அறிமுகமான பீட்சா’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் ஆகிய இருவருக்குமே இந்த திரைப்படம் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்த நிலையில் மீண்டும் இதே ஜோடி ஒரு புதிய தமிழ் படத்தில் இணைய உள்ளது.

வாசன் மூவீஸ் ஷான் சுதர்ஷன் தயாரிக்க இருக்கும் இந்த புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவாளராகவும், நிவாஸ் இசை அமைப்பாளராகவும் பணிபுரிய உள்ளனர்.

விஜய் சேதுபதி தற்போது புறம்போக்கு, இடம் பொருள் ஏவல், நானும் ரவுடிதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அவர் ரம்யா நம்பீசனுடன் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

English Summary : Reconnecting pizza couple