பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதை தடுக்க சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.4 கோடி செலவில் ஆலோசனை மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

மாணவர்களின் ‘எதிர்காலத்திற்கு வழிகாட்டும் கல்வி மற்றும் ஆலோசனை மையம், சென்னை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும் இந்த மையத்தில் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய முதுகலை பட்டப்படிப்பு அல்லது ஆராய்ச்சி படிப்பு குறித்தும் அதனால் கிடைக்கவுள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும் நேர்முகத்தேர்வில் சரியான முறையில் விவரிக்க வைத்தல், நாட்டுப்பற்றை வளர்த்தல், வேலைவாய்ப்பை அதிகரித்தல் ஆகிய ஆலோசனைகளுடன் வேலை கிடைக்காமல் தற்கொலை செய்யும் எண்ணம் கொண்ட மாணவர்களுக்கு நல்ல ஆலோசனைகளும் வழங்கி அவர்களின் தற்கொலையை தடுக்கவும் இந்த மையம் உதவியாக இருக்கும் என்றும் ஆர்.தாண்டவம் தெரிவித்தார்.

ரூ.4 கோடி செலவில் அமையவுள்ள இந்த மையத்திற்காக திட்டங்கள் தீட்டி பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் இந்த மையம் செயல்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

English Summary : Preventing suicide of student counseling center.