ஆசிரியர் பணி செய்ய உதவும் மிக முக்கிய படிப்பான பி.எ.ட் படிப்புக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள ஏறத்தாழ 1700 பி.எட். இடங்களை நிரப்புவதற்கான முதல்கட்ட பொது கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் 900 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது. முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்னும் சுமார் 800 இடங்கள் காலியாக உள்ளன. எனவே இரண்டாவது கட்ட கலந்தாய்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14ல் தொடங்கப்படும் இந்த 2வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை பாரதி தெரிவித்தார். பி.எட் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் கடந்த 1-ம் தேதி தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வு முடிவில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவ- மாணவிகள் உடனடியாக அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பேராசிரியை பாரதி கூறினார்.

English Summary: B.Ed., Counselling Date announced. Second set of Counselling Date announced. 800 Seats to be filled in Second counselling.