தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் நான்கு வழிச்சாலையில் டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஏப்ரல் 1 முதல் இந்தியா முழுவதும் தற்போதைய கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் உயர்த்தப் போவதாகவும், இது குறித்த ஆவணங்கள் மார்ச் 25-ம் தேதி மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், உரிய அனுமதி பெற்ற பின்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

விலை உயர்வைப் பொருத்தவரை, இலகு ரக வாகனங்களுக்கு ஒரு ட்ரிப்பிற்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 5 விழுக்காடு அதிகமாகவும், கன ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 10 விழுக்காடு அதிகமாகவும் ஏப் 1ம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *