விஜயின் ‘பைரவா’ படம் செய்த ஒரு சாதனையை சிம்பு நடித்திருக்கும் ‘செக்க சிவந்த வானம்’ படம் முறியடித்திருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது

விஜய்யின் பைரவா படத்தின் டிரைலர் யுடியுபில் வெளியாகி தற்போது வரை 2.4 லட்சம் லைக்குகள் வாங்கியிருப்பது தான் சாதனையாக இருந்து வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு வெளியான ‘செக்க சிவந்த வானம்’ பட டிரைலர் 2.6 லட்சம் லைக்குகள் பெற்று ‘பைரவா’ சாதனையை முறியடித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *