பிரபல நடிகரும் சமீபத்தில் வெளியான காக்கி சட்டை படத்தின் நாயகனுமான சிவகார்த்திகேயன் நேற்று மாலை டுவிட்டர் இணையதளத்தில் ரசிகர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் சாட்டிங் செய்தார். அப்போது அவர் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவைகளில் ஒருசிலவற்றை இங்கு பார்ப்போம்.

அஜீத் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். அவர் நடித்த வீரம் படம் என்னை மிகவும் கவர்ந்தது.

தனுஷ், இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்

சூர்யா, கடினமாக உழைத்தால் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடலாம் என்பதற்கு உதாரணமானவர்

ஷங்கர், மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அதற்காக என்னை விரைவில் தயார்படுத்தி கொள்வேன்.

விஜய் சேதுபதியை நான் எனது போட்டியாளராக நினைத்தது இல்லை. அவருடைய பீட்சா படம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று

அஜித்தும் விஜய்யும் இணைந்து நடிக்கும் படத்தில் என்னை காமெடி கேரக்டரில் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக ஒப்புக்கொள்வேன்.

விஜய் தொலைக்காட்சியில் இளையதளபதி விஜய் கையால் விஜய் விருது வாங்கியதுதான் தனக்கு மறக்க முடியாத நிகழ்ச்சி

சிம்பு நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படம் ‘விண்ணை தாண்டி வருவாயோ’

என்னுடைய மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. மிகவும் பாஸிட்டிவ் மனப்பான்மை உடையவர். என்னுடைய ஆரம்பகாலத்தில் எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தவர்.

English Summary : Kollywood Actor Sivakarthikeyan tweets with his fans on twitter yesterday evening.