நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், மூன்று முகம், தளபதி, விக்ரம், ஜெய்ஹிந்த் உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகரும், நடிகர் கமல்ஹாசனின் சகோதரருமான சாருஹாசன் எழுதிய ஆங்கில புத்தகம் ஒன்று நேற்று சென்னையில் வெளியானது.

நடிகராக மட்டுமின்றி பிரபல வழக்கறிஞருமாக இருந்த சாருஹாசன் தன்னுடைய நடிப்பு, மற்றும் வழக்கறிஞர் தொழிலில் நடந்த சுவாரசியமான அனுபவங்களை தொகுத்து எழுதிய ”திங்கின் ஆன் மை ஃபீட்” (Thinking on my Feet) என்ற புத்தகம் நேற்று சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் சாருஹாசனின் மனைவி கோமளம், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சுரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தனது அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட சாருஹாசன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் சுவைபட பதில் கூறினார். தன்னுடைய கடந்த கால அனுபவங்களே நூலாக வெளியாகியுள்ளது என்றும் இந்த புத்தகத்திற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

English Summary : Famous actor and advocate Charuhasan has written a english novel based on his experience ” Thinking on my Feet “.