• தீபாவளி பண்டிகையின் முந்தைய இரவும், அன்றும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் கூட்டி செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கைக்குழந்தைகள் அறவே வேண்டாம்.

• பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளை காலனி அணிந்துகொள்ள செய்யவேண்டும். அதுபோன்று மத்தாப்பு கம்பிகளை கொள்ளுத்தியதும். ஒரு பாத்திரத்தின் நீரில் கம்பிகளை போட பழக்கிவிட வேண்டும்.

• வெடிகள் வெடிக்கும்போது காட்டன் ஆடைகளையே உடுத்திக் கொள்வது நல்லது. தப்பி தவறி பட்டாசு வெடித்து தீப்பொறிகள் மேல் விழுந்தாலும் சட்டையோடு போகும். பாலியஸ்டர் உள்ளிட்ட ஆடைகளில் தீப்பொறி விழுந்தால் உருகி உடம்புடன் ஒட்டிக்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

• இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அல்லது கண்களை முழுவதும் கவர் செய்யும் வகையிலான கண்ணாடிகளை அணிந்து செல்வது அவசியம். ராக்கெட் போன்ற பட்டாசுகள் சில சமயம் குறி தவறி நம் மீது பாயும் வாய்ப்பு உண்டு. அதுபோன்று கார் அல்லது இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது மிகுந்த கவனமாகவும், மிதமான வேகத்திலும் செல்ல வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தில் வண்டியின் குறுக்கே ஓடி வந்துவிடலாம்.

• மகிழ்ச்சியான தீபாவளியாக கொண்டாடுவது நம் கையில்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *