பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து குடும்பத்துடன் சுற்றுலா செல்லுதல், சொந்த ஊருக்கு செல்தல் என பொதுமக்கள் திட்டமிட்டுள்ள நிலையில் தெற்கு ரயில்வே அவர்களுடைய வசதிக்காக சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

1. திருநெல்வேலி-காந்திதாம் – ரயில் எண் 09457: திருநெல்வேலியிலிருந்து மே.5-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 7.55 மணிக்கு புறப்பட்டு 7-ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 4.50-க்கு காந்திதாம் சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், நாகர்கோவில் டவுன், இரணியல், குழித்துறை, நெய்யாற்றிங்கரை, திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், ஆலப்புழை, எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், சொரனூர், திரூசூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணனூர், பையனூர், காஞ்சன்காடு, காசர்கோடு, மங்களூர், உடுப்பி, கும்டா, கார்வார், மாட்கான், கர்மாலி, கங்கவாளி, ரத்னகிரி, சிப்லுன், பன்வெல், வாசை ரோடு, வேப்பி, சூரத், வதோதரா, ஆனந்த், நடியாத், ஆமதாபாத், விரம்காம், திராங்தரா, சாமஹியாலி, பச்சாவ் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2.எர்ணாகுளம்- வேளாங்கண்ணி – ரயில் எண் 06016: எர்ணாகுளத்திலிருந்து மே 12, 19 ஆம் தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு மறுநாள் காலை 9.30-க்கு சென்றடையும். ரயில் எண் 06015: வேளாங்கண்ணியிலிருந்து மே 13, 20 ஆம் தேதிகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில்கள் எர்ணாகுளம் டவுன் (ரயில் எண் 06015 மட்டும்), ஆலுவா, திருச்சூர், ஒத்தப்பாலம், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. எர்ணாகுளம் – மும்பை சிறப்பு – குளிர்சாதன ரயில்கள்: ரயில் எண் 01066: எர்ணாகுளத்திலிருந்து மே 20, 27 மற்றும் ஜூன் 3 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாள்களில் இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 1.20 மணிக்கு மும்பை சிஎஸ்டிக்கு சென்றடையும். இந்த ரயில்கள் ஆலுவா, திருசூர், சொரனூர், திரூர், கோழிக்கோடு, தலச்சேரி, கண்ணனூர், பையனூர், காஞ்சன்காடு, காசர்கோடு, மங்களூர், முல்கி, உடுப்பி, குண்டப்பூர்ரா, கும்டா, கார்வார், மாட்கான், திவிம், சவந்த்வாடி சாலை, கங்கவாளி, ரத்னகிரி, சிப்லுன், ரோஹா, பன்வெல், தாணே, தாதர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.

4. சென்னை – மும்பை சிறப்பு – குளிர்சாதன ரயில்கள்: ரயில் எண் 01064: சென்னை சென்ட்ரலிலிருந்து மே 16, 23, 30, ஜூன் 6 ஆகிய நாள்களில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் மாலை 4.15-க்கு மும்பை சிஎஸ்டி சென்றடையும். இந்த ரயில்கள் அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா, ராஜம்பேட், கடப்பா, எரகண்டலா, முத்தனூர், குண்டபுரம், தாடிபத்ரி, குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், யாதுகிரி, வாடி, குல்பர்கா, சோலாப்பூர், புணே, லோனேவாலா, கல்யாண், தாணே, தாதர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

5. சென்னை – ஹெளரா சிறப்பு – குளிர்சாதன அதிவிரைவு ரயில்கள்: ரயில் எண் 00842: சென்னை சென்ட்ரலிலிருந்து மே 8-இல் மாலை 5.10-க்கு புறப்பட்டு, அடுத்தநாள் இரவு 6.30 மணிக்கு ஹெளரா சென்றடையும். இந்த ரயில் நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, துவ்வடா, விசாகப்பட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, புவனேசுவரம், கட்டாக், பத்ரக், கரக்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மேற்கண்ட சிறப்பு ரயில்களை கோடை விடுமுறைகளுக்கு வெளியூர் செல்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

English Summary : Southern Railway announced summer special trains.