Kabali-poster-on-Aeroplane-701x468சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஏர்லைன் பார்ட்னராக பிரபல விமான நிறுவனமான ஏர் ஆசியா இணைந்துள்ளது என்பதும் ‘கபாலி’ ரிலீஸ் தினத்தில் ஏர் ஏசியா நிறுவனம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் ஒன்றை இயக்கவுள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே. கபாலி படத்தின் ரிலீஸ் தினத்தில் இந்த சிறப்பு விமானம் காலை 6.10க்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் ‘கபாலி சிறப்பு விமானம்’ 7,10க்கு சென்னை வந்தடையும். அதேபோல் மாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பும் அதே விமானம் 4 மணிக்கு பெங்களூர் சென்றடையும். டிக்கெட்டின் விலை ரூ.7860. இந்த டிக்கெட்டில் பெங்களூரில் இருந்து சென்னை சென்று வர விமான பயணம், கபாலி படத்தின் டிக்கெட், ஆடியோ சிடி, காலை உணவு, மதிய உணவு, சிநாக்ஸ், குளிர்பானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தியேட்டருக்கு சென்று வர வாகன வசதி ஆகியவை அடங்கும்.

இந்த சிறப்பு விமானம் தற்போது தயாராக இருப்பதாகவும் இந்த விமானத்தில் பயணம் செய்ய பயணிகளின் முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

English Summary: Special Air Asia Flight For Kabali First Day Show