மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொழில்கல்வி பயிற்சி பெறும் சிறப்பு பள்ளி ஒன்றை சென்னை மாநகராட்சி ஆரம்பித்துள்ளது. நேற்று முன் தினம் சென்னை மேயர் சைதை துரைச்சாமி இந்த சிறப்பு பள்ளியை தொடங்கி வைத்தார். சூளையில் உள்ள மாகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இந்த சிறப்பு பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய 24 பேர் தொழிற்கல்வி பயின்று வருகின்றனர்.

ஸ்கிரின் பெயிண்டிங், நெசவு மற்றும் இதர சில கைத்தொழில்கள் இங்கு தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களால் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. மூன்று வகுப்பறைகளில் நடைபெறும் இந்த பயிற்சி வாரத்தின் ஐந்து நாட்களில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-15 ஆம் ஆண்டு தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சிறப்பு பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியை போன்று இன்னும் ஒருசில சிறப்பு பள்ளியை தொடங்க மாநகராட்சி முடிவு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English Summary : A Technology training Special School for Mentally challenged students has launched in Chennai.