விஜய்டிவியின் பிக் பாஸ் சீஸன் 3-ம் சீஸனுக்கான விளம்பர படப்பிடிப்பு இன்று பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில் தொடங்கியது

நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்ட காட்சிகள் தற்போது ஷூட் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ..

அடுத்த சில தினங்களில் புரொமோ வீடியோ சேனலில் ஒளிபரப்பாகலாமெனத் தெரிகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் ஷோ தொடங்க இருக்கிறது. போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன.

தன்னுடைய அரசியல் முயற்சிக்கான வேளைகளில் மும்முரமாக உள்ள சூழலில் பிக் பாஸ் சீஸன் 3-ல் கமல் நிகழ்ச்சியை எவ்வாறு வழங்குவார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *