இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட், சிட்னியில் நேற்று துவங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 572 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் டிக்ளேர் செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிதறடித்தனர்.

பிறகு களம் இறங்கிய இந்திய அணியின் ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. முரளி விஜய், ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். பின்னர் நிதானமான ஆட்டத்தை மேற்கொண்டனர். ரோஹித் சர்மா 40 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆட்டநேர முடிவில், இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.