ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடக்கும் நான்காவது டெஸ்டில் இந்தியாவின் லோகேஷ் ராகுல், கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடித்தனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 572 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் (31), ரோகித் சர்மா (40) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் ரோகித் சர்மா (53) நாதன் லியான் ‘சுழலில்’ போல்டானார். அபாரமாக ஆடிய லோகேஷ் ராகுல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 110 ரன்கள் எடுத்த போது மிட்சல் ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். மறுமுனையில், கேப்டன் விராத் கோஹ்லி தனது 4வது சதத்தை பதிவு செய்தார். அடுத்து வந்த அஜின்கியா ரகானே (13), ரெய்னா (0) சொற்ப ரன்னில் அவுட்டானார்கள்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 342/5 என்ற நிலையில் உள்ளது. கேப்டன் விராத் கோஹ்லி 140 ரன்களுடனும், சஹா 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.