சென்னை: தியாகராய நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் ஐடிஐ படிப்பில் சேர செப்டம்பர் 19-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தக்கர்பாபா வித்யாலயா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தக்கர் பாபா வித்யாலயா தொழிற்பயிற்சி மையத்தில் எலெக்ட்ரீஷியன், ஃபிட்டர், ஒயர்மேன், வெல்டர், ஏசி மெக்கானிக், தச்சு மற்றும் மரவேலைப் பிரிவுகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

தற்போது ஒயர்மேன் பிரிவில் ஒரு இடமும், தச்சு மற்றும் மரவேலைப் பிரிவில் 12 இடமும், வெல்டர் பிரிவில் 12 இடமும் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பம் செய்து சேருவதற்கான கடைசி நாள் வரும 19-ஆம் தேதியாகும்.

மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கொண்டு வருபவர்கள் உடனடியாக சேர்த்துக் கொள்ளப்படுவர். தகுதியான மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படும்.

சேர்க்கை பற்றிய மேலும் விவரங்களுக்கு 91766 24283 / 89397 71592 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *