கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. tnpscexams.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். 19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 10,117 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை 18.36 லட்சம் பேர் எழுதினர்.

தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் டி.என்.பி.எஸ்.சி,குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது . தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 19 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். தமிழக அரசு துறைகளில் உள்ள 10,117 காலி இடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வையாணமான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் – 4 தேர்வுகள் இன்று நடத்தப்பட்டது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12.67 லட்சம் பேர் பெண்கள், 9.35 லட்சம் பேர் ஆண்கள், 131 பேர் மூன்றாம் பாலினத்தவர். தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 7,689 மையங்களில் இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. 10ஆம் வகுப்பு தரத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடைபெறும். கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

பொது அறிவு பிரிவில் 75 திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெற்றிருந்தது. குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்வர்கள் தேர்ச்சி பெறுவார்கள். தேர்வர்கள் விடை குறிக்கவேண்டிய OMR தாளில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணைக் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தேர்வு முடிவுகளை நேரடியாக தெரிந்துகொள்ள:
https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *