2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தைகளில் அதிகமாகவும், வேகமாகவும் சொத்து சேர்த்தவர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனம் ரூ.3.6 ட்ரில்லியன் சொத்துக்களை சேர்த்துள்ளது. இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே 5 ஆண்டுகளில் அதிகம் சொத்து சேர்ந்த ஒரே நிறுவனம் வேகமாக சொத்து சேர்த்த நிறுவனங்களில் எய்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை விட 93 சதவீதம் அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் சீரான அளவில் சொத்து சேர்ந்த நிறுவனங்களில் கோடாக் மகேந்திரா முதல் இடம் வகிக்கிறது.