good teachersஇந்தியாவின் முதல் குடியரசு தலைவர் என போற்றப்பட்ட டாக்டர்  ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதியை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையிலும் கடந்த 5ஆம் தேதி  தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. சேத்துப்பட்டு எம்.சி.சி. மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா தலைமை தாங்கினார். இந்த விழாவில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

சென்னை கோடம்பாக்கம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை டே.கேத்தரின் எஸ்தர், திருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.லட்சுமி, பரமக்குடி சத்திரிய இந்து நாடார் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.தங்கப்பாண்டியன், சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ப.ராமச்சந்திரன், கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சொ.திருமுகம், சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் நேஷனல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜெ.தே.ஞானசேகர், திருநெல்வேலி நல்லம்மாள்புரம் டாக்டர் அம்பேத்கர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மை.செந்தில்குமார் உள்பட மொத்தம் 379 பேர் நல்லாசிரியர் விருது பெற்றனர்.

ஆசிரியர் நல நிதியாக ரூ.4 லட்சத்தை சென்னை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி அமைச்சர் கே.சி.வீரமணியிடம் வழங்கினார். விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘கடந்த 4 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதல் 3 இடங்களை அரசு பள்ளிகளில் படித்த 19 மாணவர்கள் பிடித்துள்ளனர். இது ஒரு சாதனையாகும். இந்த வருடமும் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்’’ என்றார்.

பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் த.சபீதா பேசும்போது, ‘‘முதல்-அமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித்துறை மீது அதிக அக்கறை கொண்டுள்ளார். அவர் கல்வித்துறைக்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளதன் காரணமாக பள்ளிக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 92.9 சதவீதமும், பிளஸ்-2 தேர்வில் 90.6 சதவீதமும் தேர்ச்சி கிடைத்தது, ஆசிரியர்களாகிய உங்களால் தான் இந்த சாதனை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வரவேற்றார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் மைதிலி கே.ராஜேந்திரன், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் இரா.பிச்சை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்பட பலர் பேசினார்கள்.

இடைநிலை கல்வி இயக்குனர் க.அறிவொளி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக செயலாளர் கார்மேகம், இணை இயக்குனர்கள் பழனிச்சாமி, கருப்பசாமி, லதா, நரேஷ், பாலமுருகன், பொன்னையா, பாஸ்கர சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் நன்றி கூறினார்.

English Summary:Teacher’s Day Function in Chennai.The Minister Presented a Award For Good Teachers.