2023-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வுக் கால அட்டவணையை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) டிஎன்பிஎஸ்சி கடந்த 17-ம் தேதி இரவு வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக 15 போட்டித் தேர்வுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் புதிதாக பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. உதவி சிறை அலுவலர் (i. ஆண்கள்/ii. பெண்கள்), உதவி மேலாளர்(சட்டம்) அரசு போக்குவரத்து கழகம், ஆராய்ச்சி உதவியாளர்(புள்ளியியல் / பொருளாதாரம் / புவியியல் / சமூகவியல்) தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணி, உதவி பயிற்சி அலுவலர்(சுருக்கெழுத்து ஆங்கிலம்) ஆகிய பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப பதவிகள் (10ம் வகுப்பு/ஐடிஐ/ பட்டயப்படிப்பு), தொழில்நுட்ப பதவிகள் (வணிகவியல்/CA/CMA (ICWA), மருந்து சோதனை ஆய்வகக் கூட்டத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் (தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணி), விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் பணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பதவிகள்( இளங்கலை பட்டத்துடன் கூடிய பணி சார்ந்த குறிப்பிட்ட கல்வித் தகுதிகள்), உதவி வேளாண்மை அலுவலர்/ உதவி தோட்டக்கலை அலுவலர், ஆய்வக உதவியாளர் (தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணி), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணிகள் புதிதாக இடம் பெற்றுள்ளன.

கணக்கு அதிகாரி/ கணக்கு அலுவலர், இளநிலை அறிவியல் அலுவலர், ஆகிய பல்வேறு துறை சார்ந்த தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த ஆண்டில் வெளியாகும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஆனாலும், 2023ம் ஆண்டுக்குள் குரூப் 4 தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். குரூப் 2/2ஏ தேர்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற லட்சக்கணக்கான தேர்வர்களின் கோரிக்கை திருத்தப்பட்ட அட்டவணையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *