கடந்த பத்து வருடங்களாக கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் நடிகை த்ரிஷாவுக்கு சமீபத்தில் தொழிலதிபர் வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருப்பினும் த்ரிஷாவுக்கு படவாய்ப்புகள் அதிகரித்து கொண்டேதான் இருக்கின்றது.

ஜெயம் ரவியுடன் நடித்து முடித்த பூலோகம் படத்தை அடுத்து த்ரிஷா தற்போது மீண்டும் அவருடன் அப்பாடக்கர்’, மற்றும் போகி ஆகிய படங்களிலும், லயன் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெய் நாயகனாக நடிக்கும் இயக்குனர் திரு படம் ஒன்றில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த படத்தை த்ரிஷாவின் வருங்கால கணவர் வருண் மணியன் தயாரித்து வரும் நிலையில் திடீரென த்ரிஷா இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் த்ரிஷா தனது மேனேஜர் கிரிதரன் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஓப்பந்தமானதால் அந்த படத்தின் தேதிகளும், ஜெய் படத்தின் தேதிகளும் ஒத்து வராததால் இந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

English Summary : Since both Film dates meets the same day, Trisha says no to Varun Maniyan production film.