பூஜை, ஆம்பள படங்களின் வெற்றிகளை தொடர்ந்து விஷால் நடிக்கவுள்ள அடுத்த படம் ஒன்றை இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ளார். ஏற்கனவே இருவரும் இணைந்து ‘பாண்டிய நாடு’ என்ற வெற்றி படத்தை கொடுத்துள்ளதால் மீண்டும் இவர்கள் இருவரும் இணையும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு முதலில் “காவல் கோட்டம்” என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இயக்குனர் சுசீந்திரன் நேற்று டுவிட்டர் இணையதளத்தில் விஷாலுடன் இணையும் படத்தின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்த புதிய படத்திற்கு ‘பாயும் புலி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சுசீந்திரன் நேற்று டுவிட்டரில் அறிவிப்பு செய்தார். மேலும் சுசீந்திரன் நேற்று தான் டுவிட்டரில் புதிதாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே தலைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1983ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

English Summary : After Poojai and Aambala Vishal wil join with Suseentharan in a film named ” Paayum Puli “.